கொரோனா இலங்கையில் பாரதூரமான கட்டத்திற்குள் பிரவேசித்துள்ளது- உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி எச்சரிக்கை

0
287
Article Top Ad

அண்மைய நாட்களாக கொரோனா பெருந்தொற்று நோய் தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கையர்கள் இதனை மிகவும் பாரதூரமான விடயமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தடுப்பூசி ஏற்றல் மாத்திரம் இந்தப் பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான ஒரே தீர்வு கிடையாது என உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான பொறுப்பதிகாரி டொக்டர் ஒலிவியா நிவேராஸ் தெரிவிக்கின்றார்.

நாடுகள் தடுப்பூசி ஏற்றுவதனால் மாத்திரம் இந்த நிலைமையில் இருந்த விடுபட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தீவிரம் பெற்றுவரும் கொரோனா நெருக்கடி நிலையின் முக்கிய சவால் மிக்க கட்டத்திற்கு நாம் தற்போது பிரவேசித்துள்ளோம் என இலங்கையர்களுக்கு விடுத்துள்ள செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.