‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பல் விபத்தால் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கும் கடல்வாழ் உயிரினங்கள்!

0
248
Article Top Ad

இலங்கையின் கடற்பரப்பில், ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பல் தீப்பற்றி எரிந்தமையால் இலங்கையின் கடற் சார் சூழலின் பெரும் பகுதி மாசடைந்துள்ளது. ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பல் தீப்பற்றியது முதல் கடல்வாழ் உயிரினங்கள் பல உயிரிழந்த நிலையில், கரை ஒதுங்கி வருகின்றமை சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் கவலையை மேலும் அதிகரித்துள்ளது.

இதுவரை இலங்கையின் புத்தளம் முதல் மிரிஸ்ஸ வரையான கடற்கரைப் பகுதியில் பத்து ஆமைகள், ஒரு டொல்பின், கடற்பறவைகள், பல மீன் இனங்கள் இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன என்று வனவிலங்கு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆமைகள் உஸ்வெடகெய்யாவ, பாணந்துறை, உனவடுன, வெள்ளவத்தை, மொரட்டுவை மற்றும் இந்தூருவ கடற்கரைகளில் கரை ஒதுங்கியுள்ளன.

இதில் ஏற்கனவே உனவடுன கடற்கரையில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட இரண்டு ஆமைகளும் இதில் அடங்குகின்றன.

பாணந்துறை மற்றும் வெள்ளவத்தை ஆகிய கடற்கரைகளில் இறந்து கிடந்த பெரும்பாலான ஆமைகளின் ஓடுகள் உடைந்த நிலையில் காணப்பட்டன.