எந்தப்பகுதியைச் சேர்ந்த மீன்களைச் சாப்பிட முடியும்? #X-Press Pearl

0
482
Article Top Ad

 

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் எரியுண்டு மூழ்கிய அனர்த்தத்தின் பின்னர் மீன்களைச் சாப்பிடமுடியுமா ? என்ற அச்சம் இலங்கையர்கள் பலரையும் ஆட்கொண்டுள்ள நிலையில் ஒரு குறிப்பிட்ட பகுதியைத்தவிர ஏனைய பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களைச் சாப்பிடமுடியும் என தேசிய நீரியல்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை (NARA) நிறுவனம் தெரிவித்துள்ளது.

குளோப் தமிழுக்கு வழங்கிய விரிவான மெய்நிகர் நேர்காணலில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த நாரா நிறுவனத்தின் பிரதம விஞ்ஞானி கணபதிப்பிள்ளை அருளானந்தன், கப்பல் மூழ்கியுள்ள பகுதியிலிருந்து நாரா நிறுவனத்தினால் மீன்பிடிக்கு தடைப்பட்ட பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்ட 15 கிலோமீட்டர் பிரதேசத்தினைத் தவிர ஏனைய பகுதியில் பிடிக்கப்படும் மீன்களைச் சாப்பிட முடியும் என சுட்டிக்காட்டினார்.