ரணில் பக்கம் சஜித் அணி உறுப்பினர்கள் செல்வது உண்மையா?

0
233
Article Top Ad

ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கிய 16 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் நேற்று இணைந்துக்கொண்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டாரவை மேற்கோள் காண்பித்து ட்ருசிலோன் இணையத்தளம் இந்தச் செய்தியைப் பிரசுரித்துள்ளது.

கம்பளை நகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 உறுப்பினர்களும்இ கண்டி மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் 3 உறுப்பினர்களும், உடபலாத பிரதேச சபையின் மூன்று உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துக்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கம்பளை நகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த அனைவரும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் இணைந்துக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துக் கொண்ட பெரும்பாலானோர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துக்கொள்வதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும், அந்த கோரிக்கைகள் குறித்து தற்போது ஆராய்ந்து வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவிக்கின்றார்.

இதேவேளை கோட்டபாய ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் தொடர்ச்சியாக இழைத்துவருகின்ற தவறுகளை சுட்டிக்காட்டி வீரியமான போராட்டத்தை நடத்துவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு முறையான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு சஜித் பிரேமதாச தவறிவிட்டுள்ளதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தமிழ் முற்போக்கு கூட்டணித்தலைவர் மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.

பாராளுமன்றத்திற்கு மீண்டும் எதிர்வரும் 23ம் திகதி பிரவேசிக்கவுள்ள ஐக்கியதேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்துகொள்ளும் எண்ணம் உள்ளதா என எழுப்பிய கேள்விக்கு மனோ கணேசன் வழங்கிய பதில் இதோ