இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக கொரிய அமெரிக்க உயர் இராஜந்திரி

0
238
Article Top Ad

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜுலி ஜி-யுன் சங்கை Julie  Chung Ji-Yoon அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார்.

தென்கொரியாவின் தலைநகர் சோலில் பிறந்த ஜுலி சங் 1977ல் ஐந்து வயதாக இருக்கும் போது தனது குடும்பத்தவர்களுடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை மாளிகையினால் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்  ஜுலி ஜி-யுன் சங் பரிந்துரைக்கப்பட்டுள்ள   விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரின் நியமனத்தை அமெரிக்க செனட் சபை உறுதிப்படுத்தினால் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜுலி சங் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

ஜூலி சங் தற்போது மேற்கு அரைக்கோள விவகாரங்களுக்கான மாநில உதவி செயலாளராக பணியாற்றி வருகிறார் அத்தோடு, இவர் செயலாளரின் சிறப்பு மரியாதை விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேலும் முன்னதாக இவர் கம்போடியாவின் புனோம் பென் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணைத் தலைவராகவும் தாய்லாந்தின் பேங்கொக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இடைநிலை ஒருங்கிணைப்பாளருக்கு சுங் தலைமை பணியாளராகவும் பணியாறிறயுள்ளார்.

மேலும் கொலம்பியாஇ வியட்நாம் மற்றும் ஜப்பானில் உள்ள அமெரிக்க தூதரகங்களிலும், சீனாவின் குவாங்சோவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்திலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், தற்போது இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான தூதுவராக அலெய்னா டெப்லிட்ஸ் பணியாற்றி வருகிறார்.

இவர் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 22ம் திகதி முதல் இந்த பதவியை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.