ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வருவதினாலே எதிர்க்கட்சிகள் இன்னமும் பலவீனமடையுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவிக்கின்றார்.
ரணிலின் வருகையால் எதிர்க்கட்சிகள் பலமடையும் என்ற எண்ணம் எவருக்கும் கிடையாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரைத் தம்மோடு இணைத்துக்கொண்டு இன்று பிரதான எதிர்க்கட்சியாக இருக்கின்ற கட்சியையும் கூறுபோட்டு விடுவாரோ என்ற பயம் பலருக்கும் உள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்
குளோப் தமிழிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்தக்கருத்துக்களைத் தெரிவித்தார்.
இலங்கைகான அமெரிக்காவின் புதிய தூதுவராக உயர்நிலை பதவியிலுள்ளவரின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளமையானது சர்வதேச அழுத்தம் மேலும் அதிகரிக்கும் என்பதை எடுத்துணர்த்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவைச் சந்திக்கப்போவதாகவும் பின்னர் அந்தச் சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டதாகவும் அறிக்கைகளை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வெளியிட்டிருந்தது. இதன் போது ஏன் பொறுப்புக்கூறல் பற்றி பேசப்போவதில்லை என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அறிவித்தது என்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பதிலளிக்கையில்
இதேவேளை கோட்டபாய ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் தொடர்ச்சியாக இழைத்துவருகின்ற தவறுகளை சுட்டிக்காட்டி வீரியமான போராட்டத்தை நடத்துவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு முறையான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு சஜித் பிரேமதாச தவறிவிட்டுள்ளதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தமிழ் முற்போக்கு கூட்டணித்தலைவர் மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்திற்கு மீண்டும் எதிர்வரும் 23ம் திகதி பிரவேசிக்கவுள்ள ஐக்கியதேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்துகொள்ளும் எண்ணம் உள்ளதா என எழுப்பிய கேள்விக்கு மனோ கணேசன் வழங்கிய பதில் இதோ