உலகெங்கும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்தது

0
200
Article Top Ad

2019ன் கடைசிப்பகுதியில் சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஒன்றைரை வருடங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.49 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16.92 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1.16 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 77 ஆயிரத்து 700-க்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.