100 கோடி தடவை பார்க்கப்பட்ட பாடல்:19 வயது பாடகியின் யூடியூப் சாதனை!

0
80
Article Top Ad

 

19 வயது பாடகி ரேணுகா பன்வார் பாடிய பாடல், யூடியூப் தளத்தில் ஒரு பில்லியனுக்கும் (100 கோடி )அதிகமான முறை பார்க்கப்பட்ட பாடல் என்ற சாதனை படைத்துள்ளது.

52 காஜ் கா தாமன் (52 52 Gaj Ka Daman) என்கிற தனிப்பாடலின் விடியோ கடந்த அக்டோபர் மாதம் யூடியூப் தளத்தில் வெளியானது.

ரேணுகா பன்வார் பாடிய இப்பாடலுக்கு இசை – அமான் ஜாஜி. அமான் ஜாஜியும் பிரஞ்சால் தாஹியா விடியோவில் நடித்துள்ளார்கள்.

இந்தப் பாடல் சமீபத்தில் யூடியூப் தளத்தில் 1  பில்லியன் (100 கோடி )பார்வைகளைப் பெற்றுள்ளது. யூடியூப் தளத்தில் விரைவாக 100 கோடி பெற்ற இந்தியப் பாடல் என்கிற சாதனையையும் படைத்துள்ளது.

இதுபற்றி ரேணுகா பன்வார் கூறியதாவது:

முதல்முறையாக ஹரியாண்வி பெண் ஒருவர் பாடிய பாடல் யூடியூப் தளத்தில் ஒரு கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. இப்பாடல் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது. இதனால் இன்ஸ்டகிராமில் என்னை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்பற்றுகிறார்கள். என்னுடைய இன்ஸ்டா குடும்பத்தினருக்கு என் குரல் மிகவும் பிடித்துள்ளது. பாலிவுட்டில் பாடுவது என் கனவு. கடவுள் நினைத்தால் இது நடக்கும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here