கொவிட் -19 தடுப்பூசி பெற்றவர்களுக்கு சர்வதேச அங்கீகார இலத்திரனியல் அட்டை

0
184
Article Top Ad

கொவிட் -19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற அனைத்து இலங்கையர்களுக்கும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி டிஜிட்டல் அட்டை  (Digital Vaccine Card)அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முயற்சி அமைச்சர் எனும் வகையில் நாமல் ராஜபக்ஷ ஆகியோரினால் சுகாதார அமைச்சில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதற்கமைய இம்மாதம் ஜப்பானின் டோக்கியோவில் இடம்பெறும் ஒலிம்பிக் தொடரிற்கு செல்லவுள்ள இலங்கை ஜிம்னாஸ்டிக் சங்கத்தின் செயலாளர் கபில ஜீவந்தவுக்கு முதலாவது கொவிட் தடுப்பூசி டிஜிட்டல் அட்டை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வெளிநாடுகளுக்கு பல்வேறு தேவைகளின் நிமித்தம் செல்பவர்கள் அவசியத்தின் அடிப்படையில் 011 7966366 என்ற தொலைபேசிக்குஅழைத்து இந்த இலத்திரனியல் த டுப்பூசி அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.