மரண அச்சத்துடன் Astra-Zeneca தடுப்பூசிக்காக 20 வாரங்கள் காத்திருந்தவர்களுக்கு ஆறுதல்

0
204
Article Top Ad

இலங்கையில் கொரோனாவின் அபாயகரத் திரிபான டெல்டா வேகமாக பரவிவரும் நிலையில் ஐந்துமாதங்களுக்கு முன்னர் அஸ்ட்ரா செனெக்கா Astra-Zeneca தடுப்பூசியை முதல் டோஸாக எடுத்துவிட்டு 20 வாரங்களாக காத்திருந்தவர்களுக்கு நிம்மதியளிக்கும் செய்தி இன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

கொவிட் தடுப்பூசியின் 728,460 டோஸ்கள் எதிர்வரும் சனிக்கிழமை (31) கிடைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய முதல் டோஸாக அதனைப் பெற்றுக் கொண்டு இரண்டாம் டோஸிற்காக காத்திருக்கும் 490,000 பேருக்கு முன்னுரிமையளித்து அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

COVAX (கொவிட் தடுப்பூசிகளை பரிமாறிக் கொள்ளும்) வசதியின் கீழ் ஜப்பானிலிருந்து இவ்வாறு குறித்த Astra-Zeneca தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

இலங்கைக்கு முதன் முறையாக முதல் தொகுதி கொவிட் தடுப்பூசியாக இந்தியாவிடமிருந்து Astra-Zeneca தடுப்பூசி கிடைத்திருந்ததோடு அதனைக் கொண்டே இலங்கை தனது கொவிட் தடுப்பூசி திட்டத்தை ஜனவரியில் ஆரம்பித்திருந்தது.

ஆயினும் கொரோனா வைரஸ் பரவல் நிலை உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து இந்தியா அதன் உள்ளூர் கேள்வி அதிகரிப்பு காரணமாக வெளிநாடுகளுக்கான Astra-Zeneca தடுப்பூசி விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தது.