இறுதி ஆசை நிறைவேறாமலே கிரிக்கட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பை விடுத்த மலிங்க

0
190
Article Top Ad

இம்முறை உலகக்கிண்ண போட்டிகளில் இறுதியாக விளையாடிவிட்டு ஓய்வுபெறும் இறுதி ஆசை நிறைவேறாத நிலையிலேயே இலங்கையின் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மலிங்க அனைத்துவிதமான கிரிக்கட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறும் தீர்மானத்தை இன்று அறிவித்துள்ளார்.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தனது அபார பந்து வீச்சால் உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்தார். நேர்த்தியான யோக்கர் பந்து வீச்சால் நட்சத்திர பேட்ஸ்மேன்களையும் திணற வைத்தவர். ஒரே ஓவரில் நான் விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியவர்.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்த மலிங்க, கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் கடந்த 2019-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் தற்போது டி20 போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். இதன்மூலம் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து மலிங்க விடைபெற்றுள்ளார்.

38 வயதாகும் மலிங்க 2004-ம் ஆண்டு ஜூலை 1-ந்திகதி டெஸ்ட் போட்டியிலும் ஜூலை 17-ந்திகதி ஒருநாள் போட்டியிலும், 2006-ம் ஆண்டு ஜூன் 15-ந்திகதி டி20 போட்டியிலும் இலங்கை அணிக்காக அறிமுகம் ஆனார்.

30 டெஸ்ட் போட்டிகளில் 101 விக்கெட்டுகளும், 226 ஒருநாள் போட்டிகளில் 338 விக்கெட்டுகளும், 84 டி20 போட்டிகளில் 107 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் 6 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட் வீழ்த்தியது அவரின் சிறந்த பந்து வீச்சாகும்.