நியூசிலாந்துக்குத் தப்பிச் செல்ல முயன்ற வடக்கு இளைஞர்கள் 63 பேர் திருகோணமலையில் கைது! – பொலிஸார் தீவிர விசாரணை

0
2
Article Top Ad

 

திருகோணமலையில் இருந்து கடல் மார்க்கமாக நியூசிலாந்துக்குத் தப்பிச் செல்ல முயற்சித்த வடக்கு மாகாண இளைஞர்கள் 63 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடல் மார்க்கமாக நியூசிலாந்துக்குத் தப்பிச் செல்வதற்காகத் திருகோணமலை ஹோட்டல் ஒன்றிலிருந்து நேற்று வெளியேறிய வேளை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்கள் தீவிர விசாரணைக்காகத் திருகோணமலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here