பெல்ஜியத்தில் கொவிட் பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் அறிவிப்பு

0
147
Article Top Ad

நாட்டை முடக்குவதைத் தவிர்க்கும் முயற்சியில், பெல்ஜியம் தொடர் கொவிட் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் அலெக்சாண்டர் டி க்ரூ கூறுகையில், ‘அனைத்து எச்சரிக்கை சமிஞ்சைகளும் சிவப்பு நிறத்தில் உள்ளன.
ஐரோப்பாவின் வரைபடம் விரைவில் சிவப்பு நிறமாக மாறுகிறது. நாங்கள் ஒரே மாதிரியாக இருக்கிறோம்.

பெல்ஜியத்தில் உள்ள சிறுவர்கள் 10 வயதிலிருந்தே முகக்கவசம் அணிய வேண்டும். சனிக்கிழமை முதல் வாரத்தில் நான்கு நாட்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வது கட்டாயமாக்கப்படும்.

திரையரங்குகள் மற்றும் அருங்காட்சியகங்களில் கொவிட் பாதுகாப்பான டிக்கெட்டுகள் எனப்படும் பாஸ்கள் தேவைப்படும்.

மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி அனைத்து பெல்ஜியர்களுக்கும் ஏப்ரல் 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும்’ என கூறினார்.