2021ம் ஆண்டில் சிறை சென்ற செய்தியாளர் எண்ணிக்கை புதிய உச்சம்

0
167
Article Top Ad

2021 சிறையில் அடைக்கப்பட்ட செய்தியாளர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக செய்தியாளர்களைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.

டிசம்பர் முதலாம் திகதி வரை, உலகம் முழுவதும் மொத்தம் 293 செய்தியாளர்கள் சிறையில் இருந்ததாக அது வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 280ஆக இருந்தது.

மிக அதிகமாக சீனா 50 செய்தியாளர்களை இந்த ஆண்டு சிறையில் அடைத்துள்ளது. அதற்கு அடுத்த நிலையில் மியன்மார் 26 செய்தியாளர்களைச் சிறையில் வைத்தது.

25 பேர் எகிப்திலும், 23 பேர் வியட்நாமிலும், 19 பேர் பெலரஸிலும் சிறையில் இடப்பட்டனர்.

தொடர்ந்து 6ஆவது ஆண்டாக சிறையில் அடைக்கப்பட்ட செய்தியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் குழுவின் நிர்வாக பணிப்பாளர் ஜோவல் சைமன் கூறினார்.

வருடா வருடம் பட்டியலில் பல நாடுகள் இடம் பெறுவது வேதனை அளிப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு 24 செய்தியாளர்கள் கொல்லப்பட்டதாகவும் குழு தெரிவித்தது.

மெக்சிகோவில் 9 செய்தியாளர்களும் இந்தியாவில் நால்வரும் கொல்லப்பட்டனர். உலகெங்கும் செய்தியாளர்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருவதை அறிக்கை சுட்டியது.