இரண்டாவது முறையாகவும் LPLஐ வென்ற யாழ் அணி !

0
238
Article Top Ad

LPL கிண்ணத்தினை இரண்டாவது முறையாகவும் லைக்காவின் Jaffna Kings அணி வென்றெடுத்துள்ளது.

லங்கா பிரிமியர் லீக் – 2021 தொடரின் இறுதிப்போட்டியில் நேற்று Jaffna Kings அணியும் Galle Gladiators அணியும் பலப்பரீட்சை நடாத்தின.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Jaffna Kings அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய Jaffna Kings அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 03 விக்கட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் Jaffna Kings அணி சார்பில் அவிஷ்க பெர்ணாண்டோ 63 ஓட்டங்களையும், Tom Kohler-Cadmore ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து 202 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய Galle Gladiators அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை பெற்று 23 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.

துடுப்பாட்டத்தில் Galle Gladiators அணி சார்பில் அதிரடியாக விளையாடி தனுஷ்க குணதிலக 54 ஓட்டங்களையும், குசால் மென்டிஸ் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தனர்.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 02 விக்கட்டுக்களையும், ஹசரங்க டி சில்வா 02 விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

இந்த வெற்றியின் உதவியுடன் இரண்டாவது முறையாகவும் LPL கிண்ணத்தினை Jaffna Kings அணி சுவீகரித்துள்ளது.

நடப்புத் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னதாக குறித்த இரு அணிகளும் மூன்று முறை மோதியிருந்தன.

இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் ஆட்டநாயகனாகவும் ஜெப்ஃனா கிங்ஸ் அணியின் அவிஷ்க பெர்ணான்டோ தெரிவானார்.

குறித்த மூன்று போட்டிகளிலும் Galle Gladiators அணியே வெற்றி பெற்றிருந்த நிலையில், இறுதிப்போட்டியில் Jaffna Kings அணியிடம் Galle Gladiators அணி வீழ்ந்துள்ளது.

இதேவேளை, கடந்த வருடமும் குறித்த இரு அணிகளுமே இறுதி போட்டியில் மோதியிருந்தன என்பதுடன், குறித்த போட்டியில் Jaffna Stallions  அணி வெற்றி பெற்று முதல் முறையாக கிண்ணத்தினை கைப்பற்றியிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.