கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை : அடுத்த சித்திரைப் புத்தாண்டில் பெரும் உணவுப் பஞ்சம்- எச்சரிக்கும் ரணில்

0
148
Article Top Ad

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

டொலர் பற்றாக்குறை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தொழில்கள் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் வேலைகள் இழக்கப்படுவதாகவும் மற்றும் விவசாயிகள் சிக்கித் தவிப்பதாகவும் தெரிவித்த அவர், இவற்றுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

கொவிட் தொற்றுநோய் இருந்த போதிலும்இ பல நாடுகள் 2020 – 2021 ஆண்டுகளில் பொருளாதார முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன என்று அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று உதவி பெறுவது அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்று வழியை முன்வைப்பதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய கடமை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் அவையொன்றும் இதுவரை நடைபெறவில்லை எனத் தெரிவித்த அவர், தற்போது நாட்டு மக்கள் கடும் கோபத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

எதிர்வரும் புத்தாண்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால் மக்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்படும் என்றும் அது அரசாங்கத்தை பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.