1985 ம் ஆண்டு இலங்கை ஹோட்டலில் அவுஸ்திரேலிய வீரர் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டாரா? விசாரணைகள் ஆரம்பம்

0
171
Article Top Ad
1985ம் ஆண்டு 19 வயதிற்கு உட்பட் அணியினர் இந்தியா இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளை இடம்பெற்ற பாலியல் வன்முறை சம்பவம் குறித்து அவுஸ்திரேலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விக்டோரியா துடுப்பாட்ட வீரரும் நடுவருமான ஜேமி மிட்ச்செல் அந்த சுற்றுப்பயணத்தின் இறுதிநாட்களில் தனக்கு என்ன நடந்தது என அறியவிரும்புகின்றார்.
1998 இல் உயிரிழந்த அப்போதைய அணியின் மருத்துவர் மல்கம் மக்கன்சி தனக்கு ஊசியொன்றை போட்டார் அதன் பின்னர் நான் சுயநினைவிழந்துவிட்டேன் என ஜேமி மிட்ச்செல் தெரிவித்துள்ளார்.
அந்த சுற்றுப்பயணத்திலிருந்து நாடு திரும்பிய பின்னர் மிடச்செல் அந்த சம்பவம் குறித்து பலருக்கு தெரிவித்திருக்கின்றார்- அதன் பின்னர் அவர் அது பற்றி பேசவில்லை.
கடந்த ஆகஸ்ட்மாதம் மிட்ச்செல் மீண்டும் கேள்விகளிற்கு விடைகளை தேட ஆரம்பித்துள்ளார்,அவர் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஸ்போர்ட்ஸ் இன்டர்கிரிட்டியை நாடியுள்ளார் அவர்கள் இது குறித்து அவுஸ்திரேலிய காவல்துறைக்கு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அவுஸ்திரேலிய காவல்துறையினர் அன்று என்ன நடைபெற்றது வீரரை பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்தவர் யார் என்பது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அந்த அணியில் இடம்பெற்றிருந்த பலர் பின்னர் அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடியுள்ளனர்,அவர்கள் அந்த சுற்றுப்பயணத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் அக்கறையின்மை குறித்தும் கரிசனை வெளியிட்டுள்ளனர்.
அந்த ஊசி காரணாக நான் சுயநினைவிழந்துபோனேன் நேர்மையான விசாரணைகள் மூலம் என்ன நடந்தது என்பது தெரியவரும் என நம்பிக்கை வெளியிட்டு;ள்ள மிச்செல் மருத்துவர் மக்கென்சி ஊசிபோட்டது நினைவில் உள்ளது நான் அது பென்சிலி;ன் என நினைத்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.
எனது சகவீரர்கள் என்னை விட்டு விலகிச்சென்றனர் அவர்கள் என்னுடன் இருந்திருக்க முடியும்,அவர்கள் அடுத்த சில நாட்களிற்கு என்னை காணவில்லை என தெரிவித்தனர் என்னை குளிக்கசெய்து ஆடைமாற்றி அவுஸ்திரேலியாவிற்கு அழைத்து சென்றதாக அவர்கள் தெரிவித்தனர் நான் விமானநிலையத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.