பெப்ரவரிக்குள் சுற்றுலாத்துறை இயல்பு நிலைக்குத் திரும்பும்! – அமைச்சர் பிரசன்ன நம்பிக்கை

0
134
Article Top Ad

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்குள் சுற்றுலாத்துறை இயல்பு நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கின்றோம் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

ஜனவரி மாதத்தில் சுமார் ஒரு இலட்சத்திலிருந்து ஒரு இலட்சத்து 25ஆயிரம்  சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், நாடு வழமைக்குத் திரும்பியவுடன் குறைந்தது 2 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும், மத்திய கிழக்கு மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைத்து நாட்டை முன்னைய நிலைக்குக் கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் அவர் கூறினார்.

கடந்த வருடம் ஜனவரி முதல் டிசம்பர் வரை சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்தனர் எனவும், அதில் 86 ஆயிரம் பேர் டிசம்பர் மாதத்தில் மட்டும் வருகை தந்திருப்பது சிறந்த போக்கைக் பிரதிபலிக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.