பாண், பால்(மா), அரிசி, மரக்கறிகள், எரிபொருள், உணவுப்பொருட்களுக்காக வரிசையில் நிற்கும் நிலை தோன்றப்போகின்றது . ஏன் ? ( விளக்கம் )

0
183
Article Top Ad

 

 

இலங்கையில் எரிவாயுவிற்காக மக்கள் வரிசைகளில் நிற்பது கடந்த சில வாரங்களாக கசப்பான காட்சியாக அமைந்திருக்கின்றது.

அடுத்துவரும் வாரங்களில் எரிவாயுவிற்காக மட்டுமன்றி மேலும் பல பொருட்கள் தேவைகளுக்காக வரிசைகளில் நிற்கவேண்டிவரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பிரபல நிதியியல் ஊடகவியலாளர்களில் ஒருவரான ஷிகார் அனிஸ் தனது டுவிட்டர் தளத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.

“வெளிநாட்டு டொலர் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு அரசாங்கம் காண்பிக்கும் முன்னுரிமையால் பாண், எரிபொருள் ,பால் ,உணவுகள் என்பவற்றுடன் பொதுஜன அரசாங்கத்தின் குழம்பிய உரக்கொள்கையின் காரணமாக மரக்கறிகள் மற்றும் அரிசிக்கும் வரிசைகளில் நிற்கும் நிலை ஏற்படும்” என ஷிஹார் அனிஸ் தனது டுவிட்டரில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

http://

ஏன் இந்த நிலை தோன்றும்?

இலங்கையின் வரலாற்றில் ஒருபோதுமே எடுத்த கடனை உரிய தவணைக்கு கட்டும் நாடென்ற இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு கவனத்திற்குகொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக்கடனை செலுத்துவதற்கு காண்பிக்கும் இந்த அரசாங்கத்தின் முன்னுரிமையானது பொதுமக்களின் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருட்களின் இறக்குமதியை விட அதிகமானதாகக் காணப்படுவதால் இறக்குமதிசெய்வதற்கு பணம் இல்லாமல் பொருட்களுக்கு பாரிய பற்றாக்குறை ஏற்படவாய்ப்பு உள்ளது.

இம்மாதம் ஜனவரி 18ம்திகதி இலங்கை அரசாங்கம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சர்வதேச இறையாண்மை முறிகள் கடனைத் திருப்பிச் செலுத்தவேண்டும்

மக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பொருட்களை இறக்குமதிசெய்வதற்கு இருக்கின்ற அமெரிக்க டொலர்களை வைத்துக்கொள்ளுங்கள். வெளிநாட்டுக்கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் வரப்போகின்ற நெருக்கடிகளை விடவும் மக்களுக்கு தேவையான அடிப்படை பொருட்கள் இல்லாமையால் ஏற்படப்போகும் நெருக்கடி மோசமானது . எனவே மக்களையே முன்னிலைப்படுத்துங்கள் என்ற கோரிக்கைகள் பலமாக பொருளாதார நிபுணர்களிடமிருந்தும் எழுந்துள்ளது.

http://

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய டொலர் இன்மையால் ஏற்படப் போகும் நெருக்கடி ஒருபுறம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திருப்பிச் செலுத்திவிட்டால் பெற்றோலை இறக்குமதி செய்யமுடியாத நிலை ஏற்படுகின்றபோது அது மின்சார விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் .

http://

அதனால் அடிக்கடி மின்துண்டிப்புக்கள் ஏற்படவாய்ப்பு உண்டு. இதன்காரணமாக வீடுகள் மட்டுமன்றி அலுவலகங்கள் தொழிற்சாலைப் பணிகளும் பாதிக்கப்படும். அதுமட்டுமன்றி டொலர் இல்லாவிட்டால் அத்தியாவசியமாக தேவைப்படும் மருந்துப்பொருட்களையும் இறக்குமதி செய்யமுடியாத நிலை ஏற்படும் எனவே டொலர் கையிருப்பை வைத்துக்கொள்ளுங்கள் என பிரபல பொருளியலாளர் நிஷான் டி மெல் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://

 

இது பற்றி விரிவாக அறிந்துகொள்ள கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியில் பீட பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கத்திடம் குளோப் தமிழ் வினவியது.