உலகின் வயதான மனிதர் உயிரிழப்பு

0
66
Article Top Ad

உலகிலேயே அதிக வயதுடைய மனிதராக அறியப்பட்டவர் தனது 112 வயதில் காலமானார்.

உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சாடர்னினோ டிலா ப்யூன்டே நேற்று தனது 112 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் வடமேற்கில் உள்ள லியோன் நகரைச் சேர்ந்தவர் சாடர்னினோ டிலா ப்யூன்டே இவரை உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனைப் புத்தகம் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தது.

பெப்ரவரி 11, 1909 இல் லியோனின் புவென்டே காஸ்ட்ரோவின் சுற்றுப்புறத்தில் பிறந்த சடர்னினோ – ‘எல் பெபினோ’ என்றும் அழைக்கப்படுகின்றார். இவர் 1933 இல் அன்டோனினா பேரியோ குட்டரெஸை திருமணம் செய்தார் .