வாடகைத்தாய் மூலம் பெற்றோரான பிரியங்கா -ஜோனாஸ் தம்பதி

0
43
Article Top Ad

2000ம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் வென்றவர் பிரியங்கா சொப்ரா .உலக அழகி பொலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்தவர் பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஃபோர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்திருந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனாசைஇ பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் முதல் குழந்தைக்கு தாய் ஆகி உள்ளார். இந்த தகவலை அவரது கணவர் நிக் ஜோனஸ் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் நிக்கை டேக் செய்து ஒரு குறிப்பைப் பகிர்ந்துள்ள பிரியங்கா ‘நாங்கள் வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையை வரவேற்றோம் என்பதை உறுதிப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்த சிறப்பு நேரத்தில் நாங்கள் எங்கள் குடும்பம் குறித்து கவனம் செலுத்துவதால் தனியுரிமையை விரும்புகிறோம். மிக்க நன்றி.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.