அவுஸ்திரேலியா ஒபன் டென்னிஸ் மகளிர் இறுதியாட்டத்தில் விளையாட ஆஷ் பார்ட்டி மற்றும் டானியலா கொலின்ஸ் தகுதி

0
158
Article Top Ad
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த உலகின் முதற்தர வீராங்கனையான ஆஷ் பார்ட்டி

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகளின் மகளிர் ஒற்றையர் இறுதியாட்டத்தில் விளையாட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த உலகின் முதற்தர வீராங்கனையான ஆஷ் பார்ட்டியும் அமெரிக்காவைச் சேர்ந்த டானியலா கொலின்ஸும் தகுதிபெற்றுள்ளனர்.

இன்றையதினம் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப்போட்டியில் ஆஷ் பார்ட்டி அமெரிக்க வீராங்கனை மெடிஸன் கீஷை 6ற்கு1 6ற்கு3 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார்.

1980ம் ஆண்டு வென்டி டேர்ன்புல் தகுதிபெற்றதன் பின்னர் 42 ஆண்டுகள் கழித்து ஆஷ் பார்ட்டி அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் இறுதியாட்டத்திற்கு தகுதிபெற்ற அவுஸ்திரேலிய வீராங்கனை என்ற பெருமையைத்தனதாக்கினார்.

அமெரிக்க வீராங்கனை டானியலா கொலின்ஸ்

இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை டானியலா கொலின்ஸ் 6ற்கு4 6ற்கு1 என்ற நேர்செட்களில் சுலோவாக்கிய வீராங்கனை இகா சுவியாடெக்கை தோற்கடித்தார் .

மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டி எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.