அவுஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு ராபேல் நடால் முன்னேற்றம் -video

0
163
Article Top Ad

நட்சத்திர டென்னிஸ் வீரர் ராபேல் நடால் தற்போது நடைபெற்றுவரும் ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதியாட்டத்திற்கு தகுதிபெற்றுள்ளார்.

இன்றையதினம் நடைபெற்ற முதலாவது அரையிறுத்திப்போட்டியில் இத்தாலிய வீரர் மாட்டியோ பெரட்டினியை 6ற்கு3 6ற்கு2  3ற்கு6 6ற்கு3 என்ற செட்களில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் நடால் .

இது அவரது டென்னிஸ் வாழ்வில் தகுதிபெற்ற 29வது இறுதிப் போட்டி என்பதுடன் 6வது அவுஸ்திரேலிய ஒபன் இறுதிப்போட்டியாகும். இதற்கு முன்னர் 2009ம் ஆண்டில் மாத்திரமே நடால் அவுஸ்திரேலிய ஒபன் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இன்றையதினம் கிரேக்க வீரர் ஸ்டெபானொஸ் ஸிற்சிப்பாஸ் மற்றும் ரஷ்ய வீரர் டானில் மெட்வடோவ் ஆகியோருக்கிடையே நடைபெறும் மற்றைய அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவருடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சம்பியன் பட்டத்திற்கான இறுதிப்போட்டியில் நடால் மோதவுள்ளார்.

தற்போது சுவிற்சர் லாந்து வீரர் ரொஜர் பெடரர் சேர்பிய வீரர் நொவாக் ஜோகோவிக் போன்று 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நடால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சம்பியன் பட்டம் வென்றால் அது சாதனை மிகு 21வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது