ஸிம்பாப்பே முன்னாள் தலைவர் பிரன்டன் டெய்லருக்கு மூன்றரை ஆண்டுகள் அனைத்துகிரிக்கட்டிலும் பங்கேற்க ஐசிசி தடைவிதிப்பு

0
132
Article Top Ad

ஸிம்பாப்வே அணியின் முன்னாள் தலைவர் பிரன்டன் டெய்லருக்கு மூன்றரை ஆண்டுகள் அனைத்துவிதமான கிரிக்கட் நடவடிக்கைகளிலும் பங்கேற்க சர்வதேச கிரிக்கட் பேரவை தடைவிதித்துள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழலுக்கு எதிரான கோவையின் நான்கு சரத்துக்களை மீறியமை சர்வதேச கிரிக்கட் பேரவையின் போதைப்பாவனைக்கு எதிரான கோவையின் ஒரு சரத்தை மீறிய காரணங்களுக்காகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டானாக செயல்பட்டவர் பிரன்டன் டெய்லர். இவரின் சமீபத்திய ட்விட்டர் பதிவில் திடுக்கிடும் தகவலை பகிர்ந்திருந்தார் அதில் அவர், இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள், கிரிக்கெட் போட்டிகளில் தன்னை மேட்ச் பிக்சிங் மற்றும் ஸ்பொட் பிக்சிங் செய்ய வற்புறுத்தியதாகவும், இல்லையென்றால் அவர் போதைப்பொருள் உட்கொண்ட வீடியோவை வெளியிடுவோம் என்று கூறி மிரட்டியதாகவும் தெரிவித்திருந்தார்

2004 முதல் 2021 வரை ஸிம்பாப்வே அணிக்காக நீண்ட காலம் விளையாடிய வீரர்களுள் ஒருவராக இருக்கும் பிரன்டன் டெய்லரை, கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்திய தொழில் அதிபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர் ,ஸிம்பாப்வேயில் டி20 தொடர் நடத்துவதற்கான ஸ்பான்சர்ஷிப் சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிப்பதற்காக டெய்லர் இந்தியா வரவேண்டும் என வேண்டிக்கேட்டுள்ளார். மேலும் டெய்லர் இந்தியா வர அவருக்கு 15,000 அமெரிக்க டாலர் தருவதாகவும் கூறியுள்ளார்.

அந்த தொழிலதிபரின் பேச்சை நம்பிய டெய்லரும் இந்தியா வந்துள்ளார். இங்குள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்த அவருக்கு மது விருந்து அளிக்கப்பட்டுள்ளது. இதன்பிறகுஇ கொக்கைன் என்கிற போதைப்பொருளையும் கொடுத்துள்ளனர். டெய்லரும் அதை வாங்கி பயன்படுத்தி இருக்கிறார்.

மறுநாள் காலை டெய்லர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வந்த அந்த தொழிலதிபர்கள், அவர் போதைப்பொருள் உட்கொண்ட வீடியோவை காட்டியுள்ளனர். பின்னர் அவரிடம்இ சர்வதேச அளவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் ‘ஸ்பாட் பிக்சிங்’ செய்ய சம்மதிக்க வேண்டும் என வற்புத்தியுள்ளனர்.

இல்லாவிட்டால் அவர் போதைப்பொருள் உட்கொண்ட வீடியோவை பொதுவெளியில் வெளியிடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளனர். இதனால், உயிருக்கு பயந்து போன டெய்லர், சூதாட்டத்தில் ஈடுபட சம்மதித்து முன்தொகையாக 15,000 டாலர்களை பெற்றுக்கொண்டுள்ளார். வேலை முடிந்ததும் மேலும் 20,000 டாலர்கள் தருவதாகவும் அவர்கள் அவரிடம் கூறியுள்ளனர்.

இந்த மாய வாலையில் தான் தெரியாமல் சிக்கி கொண்டதாகவும், முட்டாள்தனமாக கொஞ்சம் கொக்கைன் எடுத்துக்கொண்டேன் என்றும் டெய்லர் பகிர்ந்துள்ள அந்த ட்விட்டர் பதிவில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும், அங்கிருந்து தப்பித்து சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்பதால் வேறு வழியில்லாமல் அந்த பணத்தை தான் பெற்று கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் ஒரு ஏமாற்று பேர்வழி இல்லை...

இதன்பிறகு தாயகம் திரும்பிய டெய்லருக்கு மன அழுத்தம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சில நாட்கள் கழித்து அந்த தொழிலதிபர் கொடுத்த தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால், டெய்லர் அதை திரும்ப கொடுக்கவில்லை. மேலும்இ இந்த விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) உடனடியாக முறைப்பாடு  தெரிவிக்காத அவர், 4 மாதங்கள் கழித்து புகார் கொடுத்துள்ளார்.

டெய்லர் தனது குடும்பத்தின் நலனை பாதுகாக்கும் பொருட்டு தான் ஐ.சி.சி.யிடம் தகவல் தெரிவிக்க காலம் தாழ்த்தியாகவும், அவர்கள் தன்னை புரிந்து கொள்வார்கள் என நினைத்தேன் என்றும, ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து டெய்லர் அந்த பதிவில் ‘எந்தவொரு போட்டியிலும் நான் சூதாட்டத்தில் ஈடுபட்டது கிடையாது. நான் ஒரு ஏமாற்று பேர்வழி இல்லை. என் மீதான புகார் குறித்த ஐ.சி.சி. விசாரணையில் முழுமையாக பங்கேற்றேன். எனக்கு பல ஆண்டுகள் தடை விதிக்க ஐ.சி.சி. முடிவு எடுத்துள்ளது. இதனை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

எனது கதை கிரிக்கெட் வீரர்கள் எந்தவொரு சூதாட்ட அணுகுமுறையையும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்பதற்கு பாடமாக இருக்க வேண்டும். எனது வாழ்க்கையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர மறுவாழ்வு மையத்துக்கு செல்ல இருக்கிறேன்.’ என்று தெரிவித்துள்ளார்.

35 வயதான பிரன்டன் டெய்லர் கடந்த 2021 செப்டம்பரில் ஓய்வு பெறும் வரை ஸிம்பாப்வே அணிக்காக 34 டெஸ்ட்கள், 205 ஒருநாள் போட்டிகள் மற்றும் 45 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

இங்கிலாந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் கோல்பாக் வீரராகவும் டெய்லர் பங்கேற்று இருக்கிறார். கடந்த 2015 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு சில ஆண்டுகள் ஸிம்பாப்வே அணிக்காக விளையாடுவதில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டார். பின்னர் 2017ம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் ஸிம்பாப்வே அணியில் மீண்டும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.