சிவில் சமூக அமைப்புக்களின் பங்களிப்பை அரசாங்கம் வரவேற்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து

0
145
Article Top Ad

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டயை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடை சட்டம், மனித உரிமைகள் விவகாரங்கள் குறித்து சிவில் சமூக அமைப்புக்கள் காண்பிக்கும் வலுவான பங்களிப்பை வரவேற்க வேண்டும் என தெரிவித்துள்ளது

இருப்பினும் அதுகுறித்து எதிர்ப்பை வெளிக்காட்ட கூடாது என்றும் ஐரோப்பிய ஒன்றியம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீளப்பெற்றுக்கொள்வதற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாகக் கடந்த அரசாங்கம் வாக்குறுதி வழங்கியிருந்தது.

தற்போதைய அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்தாமல் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றது.