இன்றைய நெருக்கடியை ஒரு புதிய அரசாங்கத்தினால் கூட கையாளமுடியாமல் போகலாம்

0
202
Article Top Ad
இன்றைய அரசாங்கம் பதவிக்கு வந்த நாளில் இருந்து ஒரு தலைப்பட்ச தீர்மானங்கள் வழமையாகிவிட்டன.
  இன்றைய நெருக்கடி இலங்கைக்கு ஒன்றும் புதியதல்ல.அது 2022 முதற்காலாண்டில்  கட்டுமீறிப்போகும் என்பது எல்லோருக்கும் தெரியும். நெருக்கடியின் பாரதூரத்தன்மையை விளங்கிக்கொள்ளும் ஆற்றல் இல்லாதவர்கள் என்பதை ஆட்சியாளர்களும் எதிரணியினரும் நிரூபித்திருக்கிறார்கள்.எனவே எதிர்வரும் வாரங்களிலும் மாதங்களிலும் என்ன நடக்கப்போகிறது என்பதை தெளிவாக எம்மால் பார்க்கமுடியாதுள்ளது.நிச்சயமற்றதன்மைக்கு தீர்வு இல்லை.
  இன்று நாம் அனுபவிக்கின்ற பொருளாதார நெருக்கடி முன்னென்றும் இல்லாதது. இன்றைய ஆட்சிமுறை நெருக்கடி ஆட்சி மாற்றம் ஒன்றை வேண்டிநிற்கிறது.ஆனால்,புதிய அரசாங்கம் ஒன்றினால் கூட நெருக்கடியை கையாளமுடியாமல் போகக்கூடும்.அதனால்தான் சமகி ஜன பலவேகய அமைதியாக இருக்கிறது.அவர்கள் அதிகாரத்துக்கு வந்தால் கூட ஒன்றும் செய்யமுடியாது.
   இன்று தேவைப்படுவது சகல தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு அரசியல் பேச்சுவார்த்தையேயாகும்.அதாவது அரசாங்கம்,தொழிற்சங்கங்கள்,சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் மதத்தலைவர்கள் ஒன்றுசேர்ந்து நெருக்கடியை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து ஆராயவேண்டும்.இந்த கலந்தாராய்வு ஆளும் கட்சியுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படுவதாக இருக்கக்கூடாது.அரசியல்வாதிகளும் உயர்மட்ட அதிகாரிகளும் நிபுணர்களும் நாட்டை தங்களால் நிருவகிக்க இயலவில்லை என்பதை நிரூபித்து நிற்கிறார்கள்.
   அரசாங்கம் அதன் தோல்விகளை நியாயப்படுத்த ஒரு தெரிவாக உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவது குறித்து பரிசீலிக்கக்கூடும்.ஆட்சி மாற்றம் ஒன்று மக்களுக்கு உளவியல்ரீதியான ஒரு ஆறுதலைக் கொடுக்கும். செயற்திறனில்லாத– அதிகாரப்பசி கொண்ட அரசாங்கம் ஒன்றை பதவி நீக்குவதற்கு தங்களது வாக்குகளை பயன்படுத்தியதாக மக்கள் திருப்திப்படுவார்கள்.ஆனால் மக்கள் மத்தியில் அமைதியின்மை இல்லையென்றால் அவர்களுக்குஏதோ  ஒரு பாரதூரமான பிரச்சினை இருக்கிறது என்பதே அர்த்தமாகும்.
               —  டெயிலி மிறர் நேர்காணலில் அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட