ஹொங்கொங்கிற்கான எயார் இந்தியா விமான சேவை இரத்து

0
239
Article Top Ad

ஹொங்கொங்கிற்கான எயார் இந்தியா விமான சேவையை அந்நிறுவனம் இரத்துச் செய்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹொங்கொங் அதிகாரிகள் வெளியிட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் விமான சேவையின் குறைந்த அளவிலான தேவை ஆகியவற்றை முன்னிட்டு அந்நாட்டிற்கான எயார் இந்தியா விமான சேவை இரத்துச் செய்யப்படுகின்றது.

இதேபோன்று நாளை 19 ஆம் திகதி மற்றும் 23 ஆம் திகதி ஹொங்கொங்கில் இருந்து நாடு திரும்பும் எயார் இந்தியா விமான சேவையும் இரத்துச் செய்யப்படுகிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.