காலிமுகத்திடல் போராட்டத்திற்கு 50 நாட்கள் நிறைவு!

0
163
Article Top Ad

இப்போராட்டம் குறித்து ஒரு பார்வை,

அரசியல் சார்பற்ற இளைஞர்களின் எழுச்சியின் மூலம் காலிமுகத்திடல் உருவான தன்னெழுச்சி போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் 50 நாட்கள் நிறைவு.

கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி இந்த போராட்டம் ‘கோட்டா கோ கம’ என்ற தொனிப்பொருளில் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.

யுத்தத்திற்கு பின்னர் இன, மத, பேதமின்றி முழுமையாக இளைஞர்களின் எழுச்சியுடன் தொடர்ச்சியாக இடப்பெறும் போராட்டமாக இப்போராட்டமுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய பிரதான இரு நபர்களாகவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் உடனடியாக தமது பதவியை இராஜனாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தியே போராட்டம் ஆரம்பமானது.

மக்களின் பொருளாதார சுமைகள் வரலாறுகாணதவகையில் அதிகரிக்க தொடங்கியதன் விளைவால் கடந்த மாதம் முதலாம் திகதி இரவு மிரியாஹனவில் உள்ள ஜனாதிபதியின் வீட்டுக்கு அருகில் பாரிய போராட்டமொன்று வெடித்தது.

மிரியாஹன போராட்டத்தின் பின்னர் நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் வலுவடைய தொடங்கின. அதன் ஒருகட்டமாகத்தான் ‘கோட்டா கோ கம’ போராட்டம் ஆரம்பமானது.

அதன் ஒரு கட்டமாக கொழும்பு காலிமுகத்திடலில் கடந்த மாதம் 8ஆம் திகதிமுதல் இளைஞர்களால் ‘கோட்டாகோகம’ என்ற பெயரில் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது. இப்போராட்டம் நாளுக்கு நாள் வலுவடையத் தொடங்கியது. அரசாங்கத்தை விரடியடிக்க வேண்டுமென்ற தொனிப்பொருளில் அனைத்து மக்களும் இங்கு திரண்டனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இராஜனாமா செய்யும்வரை போராட்டத்தை நிறுத்தப்போவதில்லையென களத்தில் போராடிய இளைஞர்களின் வெற்றியால் கடந்த மாதம் 9ஆம்திகதி அமைச்சரவை அமைச்சர்கள் இராஜனாமா செய்தனர்.

என்றாலும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் பதவி விலகும்வரை போராட்டத்தை நிறுத்தாது இளைஞர்கள் தொடர்ந்தனர்.

கடந்த 8ஆம்திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அலரிமாளிகையில் பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் நடத்தினர்.

இந்த கூட்டத்தின் பின்னர் அவர்கள் அலரிமாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த மஹிந்த கோ கம மாற்று கோட்டா கோ கம போராட்டச்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மீது தாக்கத்தல் நடத்தினர். அவர்களது கூடாரங்களை அடித்து நொறுக்கினர்.

இதனால் அரசாங்கத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. பல அமைச்சர்கள் மற்றும் பொதுஜன பெரமுனவின் ஆதாரவாளர்களது வீடுகளும் சொத்துக்களும் சேதமாக்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் அத்துகோரலவும் மக்களிடம் சிக்கி தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.

மக்கள் எதிர்ப்பு வலுப்பெற்றதால் 9ஆம் திகதி மஹிந்த பிரதமர் பதவியை இராஜனாமா செய்தார்.

புதிய பிரதமராக 12ஆம் திகதி மாலை ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார்.

என்றாலும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டமை ஜனநாயகத்துக்கு விரோதமானது எனவும் ஜனதிபதி பதவி விலகும்வரை போராட்டம் தொடருமென இளைஞர்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.

இன்றுடன் இந்த போராட்டம் 50ஆவது நாளை எட்டிவியுள்ளது.