இந்திய வெளியுறவு அமைச்சருடன் டக்ளஸ் பேச்சுவார்த்தை!

0
122
Article Top Ad

வடக்கு மாகாணத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சிறுபோக செய்கைக்கு தேவையான உர வகைகளை காங்கேசன் துறை துறைமுகத்தின் ஊடாக எடுத்துவருவது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கருடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.

இந்த கலந்துரையாடலில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர், குறித்த முயற்சிகளுக்கு இந்திய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.