பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அந்நாட்டு அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியை பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி முல்டன் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களமிறங்கிய அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரரான இமாம் உல் ஹாக் 72 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக கேப்டன் பாபர் ஆசம் 77 ரன்கள் அடித்தார்.
பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அகில் ஹுசேன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 32.2 ஓவர் முடிவில் 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக அந்த அணி வீரர் ஷமர் ப்ரூக்ஸ் 42 ரன்கள் அடித்தார். கைல் மேயர்ஸ் 33 ரன்களும், கேப்டன் நிகோலஸ் பூரன் 25 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக முகமது நவாஸ் 4 விக்கெட்களும், வாசிம் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதனையடுத்து பாகிஸ்தான் 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.