ஏறக்குறைய இலங்கை திவாலாகிவிட்டது ; இந்திய வெளியுறவு அமைச்சர் தெரிவிப்பு!

0
94
Article Top Ad

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தலைமையில் நேற்று சனிக்கிழமையன்று இலங்கையின் நிலைமை குறித்த நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.

இந்த கடினமான நேரத்தில் அண்டை நாட்டோடு நிற்பதன் அவசியம் குறித்து “ஒருமித்த ஆதரவு” இருப்பதாக இந்த கூத்தாட்ஜ்ஜில் எஸ்.ஜெய்சங்கர் கூறினார்.

இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர்கள் விமுரளீதரன், மீனாட்சி லேகி மற்றும் ராஜ்குமார் ரஞ்சன் சிங் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

“இலங்கையின் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் இந்தியாவின் பங்கு குறித்து நேர்மறையான சூழ்நிலையில் ஒரு நல்ல விவாதம் நடைபெற்றது” என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

உணவு, மருந்து, சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு இலங்கை முழுவதும் கடுமையான தட்டுப்பாட்டு உள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது.

ஏறக்குறைய இலங்கை திவாலாகிவிட்டது. கடுமையான வெளிநாட்டு நாணய நெருக்கடியால், வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் பிற்போட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்குள் செலுத்த வேண்டிய சுமார் 25 பில்லியன் அமெரிக்க டாலர்களில், இந்த ஆண்டுக்கான கிட்டத்தட்ட 7 பில்லியன் அமெரிக்க டாலர் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்துவதாக ஏப்ரல் மாதம் இலங்கை அறிவித்தது. மொத்த வெளிநாட்டுக் கடன் 51 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது கூறியுள்ளார்.