இலங்கை – அவுஸ்ரேலியா மோதும் விறுவிறுப்பான ஆட்டம் இன்று!

0
108
Article Top Ad

இலங்கை மற்றும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போட்டியானது இன்று மதியம் 2.30 மணிக்கு கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு தசுன் சானகவும், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிக்கு ஆரோன் பின்ஞ்சும் தலைமை தாங்கவுள்ளனர்.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை அணி அபார வெற்றியை பெற்றது.

ஆகவே இன்றைய போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இலங்கை அணி களமிறங்கவுள்ளது. 5 போட்டிகைளை கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒருபோட்டியில் வெற்றிபெற்றுள்ளன.