வரிசையில் நின்ற மக்களின் கடும் தூஷண வசைபாடலுக்கு இலக்கான சரத் வீரசேகர

0
153
Article Top Ad
இனவாதத்தை மூலதனமாக வைத்து பாராளுமன்றத்திற்கு தெரிவானவர் சரத் வீர சேகர . கடந்த பாராளுமன்றத்தேர்தலில் 328,092 வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் அதிக வாக்குகளைப் பெற்றவர் வரிசையில் முதலிடம் பிடித்தவர்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகவும் பதவிவகித்த அவர் கடந்த மே 9ம்திகதி முழு அமைச்சரவையும் இராஜினாமாச் செய்த போது விலகியவர் .
நேற்றையதினம் கொழும்பு புறநகர் பகுதியான பலவத்தையிலுள்ள ஐஓசி பெற்றோல் நிலையத்த்திற்கு அருகிலுள்ள கடைக்கு வாகனத்தில் சென்றபோது அங்கு பெற்றோலுக்காக காத்திருந்த மக்களின் கடும் தூற்றலுக்கு இலக்கானார் .
மக்கள் சிங்களத்திலுள்ள உச்சத் தூஷணவார்த்தைகளால் அவருக்கு அபிஷேகம் செய்து கோபத்தை வெளிப்படுத்தினர். பாராளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதிகளுக்கு எதிராக அடிக்கடி இனவாதக் கருத்துக்களை வெளிப்படுத்தும் அவர் அண்மையில் குருந்தூர் மலை விடயத்தில் பேசியபோது சிங்கள பௌத்தை மக்களின் பொறுமையைச் சோதிக்கவேண்டாம் என்று அச்சுறுத்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் கடற்படை உயர் அதிகாரியான அவர் இறுதி யுத்தக்காலத்தின் போது சிவில் பாதுகாப்பு படைகளின் தளபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது