யுவான் வாங்-5 கப்பலை இந்தியா உன்னிப்பாக கண்காணித்துவருகின்றது!

0
118
Article Top Ad

இந்து சமுத்திரன் ஊடாக இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பயணிக்கும் யுவான் வாங்-5 கப்பல் தொடர்பில் இந்தியாஉன்னிப்பாக அவதானித்து வருகிறது. இதனால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்பதை நாம் மறுகிறோம் அவர்களை போன்றே எமது தொழில்நுட்பமும் பலம்வாய்ந்ததாக உள்ளதுடன், நாமும் சீனாவின் சமுத்திரவியல் நடவடிக்கைகள் தொடர்பில் உண்ணிப்பாக கண்காணித்து வருகிறோம் என ஓய்வுபெற்ற முன்னாள் இந்திய கரையோர காவற்படையின் கிழக்கு பிராந்திய தளபதி கொமடோர் ஆர்.எஸ். வாசன் ,குளோப் தமிழ் இணையத்துக்கு கருத்து வெளியிட்டார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

யுவான் வாங்-5 கப்பல் தென் சீனக் கடலின் ஊடாக இந்து சமுத்திரத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இதுவொரு உளவு பார்க்கும் கப்பலாகும். இதில் ரொடார் உட்பட பல தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. குறிப்பாக கப்பல் நங்கூரமிடப்பட்டிருக்கும் இடத்திலிருந்து 750 கி.மீ தூரத்தை உளவு பார்க்க கூடிய தொழில்நுட்பம் உள்ளது.

சாட்லைட் உட்பட விண்வெளி செயல்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்களை இந்த கப்பலின் ஊடாக ட்ராக் பண்ண முடியும். இவ்வாறு பல அச்சுறுத்தலான விடயங்கள் உள்ள கப்பல் அம்பாந்தோட்டையில் ஒருவாரம் தரித்து நிற்கப்போகிறது. ஒருவாரம் தரித்து நிற்கவேண்டிய அவசியம் என்ன?. இந்தக் கப்பல் எந்த துறைமுகத்திற்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால், அங்கு எவ்வளவு நேரம் தரித்து நிற்கிறது என்பதுதான் கேள்வி.

விண்வெளி செயல்பாடுகள், துறைமுக செயல்பாடுகள் மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்து இதன்மூலம் கண்காணிக்க முடியும். சீனாவின் நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியா தொடர்ந்து கண்காணித்த வண்ணமே உள்ளது. இந்தக் கப்பல் எங்கு வருகிறது? என்ன செய்யப் போகிறது தொடர்பிலான தரவுகளை நாம் வைத்துள்ளோம்.

நாங்களும் சில சிறப்பு திட்டங்களை கையாள்கிறோம். எந்தக் கப்பல் எங்கு செல்கிறது. இராணுவங்கள் எங்கு செல்கின்றன உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கண்காணிப்புகளை நடத்திதான் வருகிறோம். எமக்கு எவ்வித பயமும் இல்லலை. கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியாவின் பூகோள ரீதியான அமைப்புகளை நாம் கையாள்கிறோம். இலகுவாக சீனாவால் இதனையும் செய்துவிட முடியாது.

இலங்கைக்கு எப்போதும் இந்தியா உதவிகளை வழங்கிய வண்ணம்தான் உள்ளது. அண்மையில்கூட 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கியுள்ளோம். இலங்கை இந்த துறைமுகத்தை சீனாவுக்கு குத்துகைக்கு வழங்கவிட்டது. என்றாலும் இந்த ஒப்பந்தத்தில் இராணுவப் பயன்பாடுகள் குறித்த தகவல்கள் ஏதும் இல்லையென்றே அறிகிறோம். அவ்வாறான செயல்பாடுகள் இருந்தால் இலங்கை அதற்கு அனுமதியளிக்கக் கூடாது. எரிவொருளை பெற்றுக்கொள்ள எந்தவொரு கப்பலும் எந்தவொரு துறைமுகத்திற்கும் வருகை தரலாம். இந்தியாவுக்கு கூட இந்தக் கப்பல் வருகை தரலாம். ஆனால், எரிபொருளை பெற்றுக்கொண்டு சென்றுவிட வேண்டும். ஏனைய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைக்கக் கூடாது என்றார்.