இறுதி ஓவரில் இந்தியா திரில் வெற்றி!

0
91
Article Top Ad

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 2ஆவது லீக் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

டுபாயில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின.

குழு ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற இப்போட்டியில், நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியக் கிரிக்கெட் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 19.5 ஓவர்கள் நிறைவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமட் ரிஸ்வான் 43 ஓட்டங்களையும் இப்தீகார் அஹமட் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும் ஹர்ஸ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் அவீஷ்கான் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 148 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி, 19.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், இந்தியா அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, விராட் கோஹ்லி மற்றும் சூர்யகுமார் யாதவ் 35 ஓட்டங்களையும் ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொஹமட் நாவஸ் 3 விக்கெட்டுகளையும் நஸீம் ஷா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 3 விக்கெட்டுகளையும் ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட ஹர்திக் பாண்ட்யா தெரிவுசெய்யப்பட்டார்.