Article Top Ad
மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து, அனைத்து பொதுக் கட்டிடங்களிலும் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் இறக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
தேசிய துக்க காலம் பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1952-1972 காலப்பகுதியில் காமன்வெல்த் தலைவரும் இலங்கை ராணியுமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு குறித்து ஜனாதிபதி விக்கிரமசிங்க, அரச குடும்பம், அரசாங்கம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

