13ஆவது திருத்தச் சட்டம் இறுதித் தீர்வல்ல – சிவாஜிலிங்கம்

0
135
Article Top Ad

அரசியல் தீர்வு விடயத்தில் 13வது திருத்தச் சட்டமே இறுதித் தீர்வு என இந்தியா அரசாங்கம் தனது நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் 51 வது அமர்வில் இலங்கை தொடர்பில் தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டும் இலங்கை அரசாங்கம் ஐ நா மனித உரிமை பேரவை நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களை நிறைவேற்றாது அலட்சியம் செய்தே வருகின்றது இலங்கையின் இந்த பித்தலாட்டம் செயலை சர்வதேச சமூகம் புரிந்து கொண்டு இறுக்கமான தீர்மானத்தை எடுக்கவேண்டும். இதேவேளை ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் சீனா ரஷ்யா பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக குரலை கொடுத்துள்ளார்கள்.

ஆனால் இந்தியா இனப்பிரச்சினைக்கான தீர்வுபற்றி கூறிப்பிட்டுள்ளது குறிப்பாக இப் பிரச்சினைக்கு தீர்வாக 13 ஆம் திருத்த சட்டம் ஊடாக என்று கூறப்பட்டுள்ளது அவ்வாறு என்றால் இலங்கையின் இனப் பிரச்சனைக்கு தீர்வாக 13 ஆம் திருத்தத்தை தீர்வாக கருதுகிறதா என கோரவிரும்புகிறோம். நிச்சயமாக இதனை ஈழத் தமிழினம் ஒருபோதும் தீர்வாக ஏற்றுக் கொள்ள மாட்டாது. எத்தகைய வற்புறுத்தல் என்றாலும் இதனை ஏற்றுக்கொள்ள முடுயாது.

13 ஆவது திருத்த சட்டம் அரசியலமைப்பில் உள்ளது அதனை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாது மலினப்படுத்தியுள்ளது இதனை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் ஜ.நா மனித உரிமை பேரவையில் இந்தியா பொறுப்பு கூறல் தொடர்பில் எதையும் கூறவில்லை இந்தியா பொறுப்பு கூறல் விடையத்தில் எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பாகும் என்றார்