குறைக்கப்பட்ட வெந்து தணிந்தது காடு ரன்டைம்!

0
11
Article Top Ad

கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படம் நாளை மறுதினம் செப்டம்பர் 15ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

வெந்து தணிந்தது காடு
சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகிறது. படம் மொத்தம் மூன்று மணி நேரம் என சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியாகி இருந்தது.

ஏற்கனவே சமீபத்தில் வந்த கோப்ரா உள்ளிட்ட படங்கள் மூன்று மணி நேரம் ரன்டைம் இருந்ததால் நெகடிவ் விமர்சனங்கள் சந்தித்தது. அதனால் வெந்து தணிந்தது காடு படமும் அவ்வளவு நீளமாக இருந்தால் எப்படி என ரசிகர்கள் பேசி வந்தனர்.

இந்நிலையில் தற்போது சென்ஸார் பணிகள் முடிந்து வெந்து தணிந்தது காடு படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்து இருக்கிறது.

மேலும் சென்சாரில் சில காட்சிகள் வெட்டப்பட்டு தற்போது ரன் தடவை 2 மணி நேரம் 50 நிமிடமாக குறைந்திருக்கிறது என தகவல் வந்திருக்கிறது. படத்தின் கடைசி 10 நிமிட காட்சிகள் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் எனவும் தெரிகிறது.