‘வெந்து தணிந்தது காடு’ ரிலீஸ்.. ரசிகர்களுக்கு கவுதம் மேனன் கோரிக்கை!

0
137
Article Top Ad

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த மூவர் கூட்டணியில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சிம்பு – கவுதம் வாசுதேவ் மேனன் – ஏ.ஆர்.ரகுமார் இப்படங்களின் வரவேற்பை தொடர்ந்து ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் நாளை தமிழகம் முழுவதும் 600-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் இதனை விழாக்கோலமாக மாற்ற பல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

கவுதம் வாசுதேவ் மேனன் – சிம்பு இந்நிலையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வரும் ரசிகர்களுக்கு இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதில், “வெந்து தணிந்தது காடு படத்தை காலை 5 மணிக்கு பார்க்க வரும் ரசிகர்கள் இரவு நன்றாக தூங்கிவிட்டு வரவும். ஏனென்றால், கதை மற்றும் கதாபாத்திரத்தின் ஓட்டம் செட் ஆக கொஞ்சம் நேரம் எடுக்கும்” என்று கவுதம் மேனன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.