மென்பொருள் மற்றும் செயலி மேம்படுத்தல் : உங்கள் பாதுகாப்பிற்கு அவை ஏன் முக்கியம்?

0
575
Article Top Ad

“நீங்கள் புதுப்பித்த நிலையில் இல்லை. புதிய பதிப்பைப் பெற இங்கே அழுத்தவும்.” இதற்கு முன் எப்போதாவது இதுபோன்ற நினைவூட்டல் அல்லது அறிவிப்பை நீங்கள் நிராகரித்திருக்கின்றீர்களா? எச்சரிக்கை! இவ்வாறு நடந்திருப்பின், நீங்கள் குறிப்பிடத்தக்க ஆபத்தில் உள்ளீர்கள். புதுப்பிப்புகள் ஏன் அடிக்கடி தோன்றும் அல்லது சில செயலிகள் காலாவதியானதாக இருந்தால் ஏன் வினைத்திறனுடன் செயல்படாது என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?

உங்கள் அன்றாட வாழ்வில் நீங்கள் எவ்வாறு ஆடை அணிகின்றீர்கள், சாப்பிடுகின்றீர்கள் மற்றும் வேலை செய்கின்றீர்கள் என்பதில் ஏற்படும் தொடர்ச்சியான மாற்றங்களைப் போலவே மென்பொருள் மற்றும் செயலிகளும் அடிக்கடி மேம்படுத்தப்பட வேண்டும். சமூக மாற்றங்களை மாற்றியமைக்க மற்றும் கடைப்பிடிக்க விரும்பாத ஒரு பழமையான அல்லது வழக்கற்றுப்போன நபரை கற்பனை செய்து பாருங்கள். தன்னியக்க உலகில் அவர் எப்படி வாழ முடியும்? அவர் கவனிக்கப்படுவதே பெரும் சவாலாக இருக்கும். தொழில்நுட்பத்தில் ஒன்றும் தெரியாதவராக இருப்பதால் ஏனையோர் அவரை கிண்டல் செய்ய கூடும்.

இணையாக, மென்பொருள் மற்றும் செயலியை மேம்படுத்த தவறுதல் மூலமாக செயல்நிரலிலுள்ள பிழைகள் மற்றும் குறைபாடு காரணமாக ஹேக்கர்களின் (கணினி ஊடுருவி) புத்திசாலித்தனத்தினால் நீங்கள் ஆபத்தை சந்திக்க நேரிடலாம். எனவே, குறிப்பிட்ட செயலிகள் அல்லது மென்பொருளின் பழைய பதிப்புகள் அதிக தாக்கத்தைக் கொண்டுள்ளன, இது அறியப்பட்ட மற்றும் அறியப்படாத அச்சுறுத்தல் இருப்பதற்கான அதிக வாய்ப்பையும் இடத்தையும் உருவாக்குகிறது.

10QBIT இன் பாதுகாப்பு வழிநடத்துபவர், தினுஜ விக்கிரமாராச்சி, “வங்கி செயலிகளைப் போலன்றி, பெரும்பாலான செயலிகள் இயல்புநிலை உள்ளமைவுகளுடன் கட்டமைக்கப்படுகின்றன அல்லது உருவாக்கப்படுகின்றன, மேலும் அவற்றில் பாதுகாப்பு எதிர் நடவடிக்கைகள் எதுவும் இல்லை. அதனால் அவை கோட் இன்ஜெக்ஷன் தீம்பொருள் (code injection malware), ரிவர்ஸ் இன்ஜினியரிங், தீம்பொருள் உட்பொதித்தல், முறையற்ற தீங்கான மாற்றங்கள் செய்தல், மேன் இன் தி மிடில் (எம்.ஐ.டி.எம்) (Man in the Middle) – ஒருவருக்கொருவர் நேரடியாக தொடர்புகொள்வதாக நம்பும் இரு தரப்பினரிடையே, தாக்குபவர் இரகசியமாக இடைமறித்து செய்திகளை அனுப்புதல் மற்றும் பல தாக்குதல்களால் பாதிக்கப்படலாம்.

செயலிகளை உருவாக்குபவர்கள் தகுந்த பாதுகாப்பு எதிர் நடவடிக்கைகள் மற்றும் செயலி பாதுகாப்பு/கவச அம்சங்களைச் உள்ளடக்க வேண்டும், மேலும் பயனர்கள் எப்போதும் Play store மற்றும் app store போன்ற நம்பகமான மூலங்களில் இருந்து செயலிகளை பதிவிறக்கம் செய்து நிறுவ வேண்டும். அந்த நம்பகமான மூலங்களிலும், கண்டறிதல் குறைபாடு மற்றும் ஹேக்கர்களின்(கணினி ஊடுருவி) கண்டறிவதைத் தவிர்க்கும் திறன் என்பவற்றின் காரணமாக தீங்கிழைக்கும் பயன்பாடுகளை விநியோகிக்கும் சம்பவங்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.” என விளக்கினார்

போதுமான அளவு பாதுகாப்பு நடைமுறைகள் பற்றி அறியாத செயலி புதுப்பிப்பு உருவாக்குபவர்கள் மற்றும் ஹேக்கர்களின்(கணினி ஊடுருவி) தீங்கிழைக்கும் செயல்பாடு இறுதியில் தரவுகள் திருடப்படுவதற்கும்,அவர்களின் கணினிகளில் மறைப்பொதுக்க சிக்கல்கள் ஏற்படுவதற்கும் மேலும் பலவகையான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம்..சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட செயலியினை உருவாக்குபவர்களுக்கே சாத்தியமான பாதுகாப்பு அபாயத்தைக் கண்டறிய பல ஆண்டுகள் ஆகும், ஆனால் ஹேக்கர்கள் (கணினி ஊடுருவி) அதை முன்னரே அறிகின்றனர் என தினுஜ கூறினார்.

செயலிகள் மற்றும் மென்பொருளை மேம்படுத்தல் மூலம் கிடைக்கும் பாதுகாப்பு நன்மைகள் என்ன?

தினுஜவின் அறிவுரை இதோ. “இணைய பாதுகாப்பில் தனித்துவமான ஆளுமை மற்றும் தொழில் வல்லுநர்கள் என்ற வகையில் பாதிப்புகள், சுரண்டல்கள், பாதுகாப்பு துளைகள் மற்றும் பிற அச்சுறுத்தல்கள் குறித்து நாங்கள் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருக்கின்றோம்.இருப்பினும்,பயனர்கள் தங்கள் தொலைபேசிகளில் பல செயலிகளை நிறுவியிருப்பதால்,நாங்கள் செய்வது போல் பாதுகாப்புச் சிக்கல்கள் குறித்துப் புதுப்பித்த நிலையில் இருக்க முடியாது.அவர்களால் ஒவ்வொரு செயலியின் இணையதளத்திற்கும் சென்று பாதுகாப்பு மீறல்கள் மற்றும் கண்டறியப்பட்ட பாதிப்புகளை சரிபார்க்க முடியாது, எனவே அவர்கள் புதுப்பிப்பைப் பெற்றவுடன் கூடிய விரைவில் புதுப்பிப்பதே வசதியான விடயம். நீங்கள் ஒரு புதுப்பிப்பைப் பெறும்போது, மாற்றப் பதிவையும் மாற்றப்பட்ட அனைத்தையும் நீங்கள் காணலாம்”.

உங்கள் மென்பொருளைப் புதுப்பிப்பதன் முக்கியத்துவத்தை இப்போது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், இணைய அச்சுறுத்தல்களிலிருந்து உங்களைப் பாதுகாப்பதற்கான சில குறிப்புகள் இங்கே உள்ளன:

நீங்கள் அதிக வேலை பழுவுடன் இருக்கும் ஒருவராக இருந்தால், அடிக்கடி புதுப்பிப்புகளைப் பார்க்க உங்களுக்கு நேரமில்லை என்றால், உங்களுக்கான உதவிக்குறிப்பு இதோ. தன்னியக்க மேம்படுத்தலை செய்ல்படுத்துவதன் மூலமாக உங்கள் செயலிகள் மற்றும் மென்பொருளை நீங்கள் சரிபார்த்து மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது. மென்பொருள் தானாகவே கிடைக்கக்கூடிய புதுப்பிப்புகளைக் கொண்டுள்ளது.ஏதேனும் கண்டறியப்பட்டால்,உங்கள் தலையீடு இல்லாமல் புதுப்பிப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு நிறுவப்படும்.

உங்கள் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த, மைக்ரோசாஃப்ட் மால்வேர்பைட் (Microsoft’s Malwarebyte) மற்றும் ஆப்பிளின் நார்டன் 360 (Apple’s Norton™360) போன்ற தீம்பொருள் எதிர்ப்பு ஸ்கேனர் பயன்பாட்டைப் பயன்படுத்தலாம்.

-செலினா கேரன்-