ரஷ்யாவுக்கு ‘நியாயமான தண்டனை’ வேண்டும் ; ஜெலென்ஸ்கி உலக நாடுகளுக்கு அழைப்பு!

0
77
Article Top Ad

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு ரஷ்யா “நியாயமான தண்டனையை” எதிர்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி , ஐநா பாதுகாப்பு கவுன்சில் உரையில் தெரிவித்துள்ளார்.

சிறப்பு போர் நீதிமன்றத்தை உருவாக்கவும், ரஷ்யாவினால் செய்யப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றி ஆராயவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஒரு சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்குவது, ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றதற்கும் கணக்குக் காட்ட உதவும் என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

உக்ரேனிய எதிர் தாக்குதலின் போது ரஷ்யப் படைகளிடம் இருந்து சமீபத்தில் மீட்டெடுக்கப்பட்ட வடகிழக்கு நகரமான Izyum இல் 445 புதிய கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா தனது ஆக்கிரமிப்புக்கான விளைவுகளை சந்திக்க வேண்டும். மேலும் பொருளாதாரத் தடைகள் மற்றும் ஐ.நா. நிரந்தர பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராக உள்ள ரஸ்யாவை அகற்றுவதன் மூலம் அதன் சக்திவாய்ந்த பங்கை ஒழிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

உக்ரேனிய உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், நாட்டின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

அவரது நான்காவது மற்றும் ஐந்தாவது நிபந்தனையாக, கியேவிற்கு புதிய பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் மாஸ்கோவின் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக அனைத்து நாடுகளும் அழைப்பு விடுப்பதில் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.