இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் கலவரம் ; 127 பேர் பலி!

0
73
Article Top Ad

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியைக் காண மைதானத்தில் அதிக அளவில் ரசிகர்கள் குவிந்தனர்.

வெற்றி பெற்ற அணியின் ரசிகர்களும், தோல்வி அடைந்த அணியின் ரசிகர்களும் மோதிக் கொண்டனர். அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 127 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்களில் 2 பேர் போலீஸ் அதிகாரிகள். 34 பேர் மைதானத்திற்குள் உயிரிழந்தனர், மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கலவரத்தில் குழந்தைகளை பறிகொடுத்த தாய்மார்கள் கண்ணீர் விட்டு கதறியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது