கனடாவிற்கு மாணவர் விஸாக்களுக்கு விண்ணப்பிப்போது தொகை பத்துமடங்காக அதிகரிப்பு

0
116
Article Top Ad

 

கனடா நாட்டில் கல்வி கற்பதற்காக இலங்கையில் இருந்து விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை கடந்த ஐந்து வருடங்களில் பத்துமடங்காக அதிகரித்திருப்பதாக பிரியாவிடைபெற்றுச்செல்லும் இலங்கைக்கான கனேடியத்தூதுவர் டேவிட் மெக்கினன் தெரிவித்தார்.

கனடாவிற்கு விஸயாவிற்காக விண்ணப்பித்த இலங்கையர்கள் நீண்டகாலமாக பதிலுக்கு காத்திருப்பது தொடர்பாக குளோப் தமிழ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இந்தக்கருத்தைத் தெரிவித்தார்.

கொவிட்டைத் தொடர்ந்து கனடாவிற்கான விஸா விண்ணப்பங்களில் அதிகரிப்பு காணப்பட்டது. அதில் குறிப்பாக இலங்கையில் இருந்து அதிகளவானோர் விண்ணப்பித்தனர் .பொருளாதார நெருக்கடியும் இதற்கு ஒரு பகுதியளவில் காரணமாக இருக்கலாம். ஆனால் கடந்த ஐந்துவருடங்களில் இலங்கையில் இருந்து மாணவர் விஸாக்களுக்காக விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை பத்துமடங்காக அதிகரித்துள்ளது எனக் குறிப்பிட்டார்

இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைபேரவையில் இலங்கை தொடர்பான கனடாவின் நிலைப்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் கனடாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ச்சியானதாக இருப்பதாகவும் இலங்கையில் கனடா நின்று நிலைக்கும் சமாதானம் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை எதிர்பார்ப்பதாகவும்அவர் கூறினார்.

2017ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கைக்கான கனேடியத் தூதுவராக பதவிப் பொறுப்பை ஏற்றிருந்த டேவிட் மெக்கினன் அவர்கள் தனது பதவிக்காலம் நிறைவடைந்து இன்று மீண்டும் கனடா திருப்புகின்றமை குறிப்பிடத்தக்கது.