உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம்!

0
87
Article Top Ad

உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா ஆகியோர் எச்சரித்துள்ளனர்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு பணவீக்கம் தொடர்ந்து பிரச்சனை அதிகமாகியுள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு உலக பொருளாதார மந்தநிலை மிகவும் உச்சமாக இருக்கும்.

முன்னேறிய பொருளாதாரங்களின் வளர்ச்சி குறைந்து வருவதையும், பல வளரும் நாடுகளில் நாணயத் தேய்மானமானமும் ஏற்பட்டு வருகிறது.

வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கம் இருந்தாலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கிகள் தங்கள் முயற்சிகளைத் தொடர வேண்டுமெனவும் உலக வாங்கி கோரிக்கை விடுத்துள்ளது.