நாட்டில் பல பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எக்காரிகை

0
84
Article Top Ad

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் வளிமண்டலத் தளம்பல்நிலை தொடர்ந்தும் காணப்படுவதன் காரணமாக, பெரும்பாலான பிரதேசங்களில் இன்று ( சனிக்கிழமை) மேகமூட்டமான வானம் காணப்படும் என வளிமண்டலத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

மேலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பியகம, கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தளை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட களனி கங்கை பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் உயரும் அபாயம் உள்ளதால், திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜாஎல, கட்டான மற்றும் வத்தளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் நீர் மட்டம் உயரும் அபாயம் உள்ளதால் பாலிந்தநுவர மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலகங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.