‘தீ தளபதி’ – வாரிசு 2ம் சிங்கிள் அப்டேட் வெளியானது!

0
127
Article Top Ad

நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் கூட்டணி சேர்ந்திருக்கும் படம் தான் வாரிசு. டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு தான் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

ஏற்கனவே வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆகி இருக்கிறது. அது மட்டுமின்றி படத்தின் சில ஸ்டில்களும் வெளியிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று விஜய் சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் நிறைவு செய்வதை கொண்டாடும் விதமாக வாரிசு புது அப்டேட் மாலை 6.30 மணிக்கு வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

எதிர்பார்த்தது போலவே தற்போது வாரிசு படத்தின் இரண்டாம் சிங்கிள் அப்டேட் தான் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

’தீ தளபதி’ என்ற இந்த பாடல் டிசம்பர் 4ம் தேதி மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்து இருக்கின்றனர்.