திலினி பிரியமாலி விடுதலை

0
62
Article Top Ad

நிதி மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் திலினி பிரியமாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரியமாலி, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ததன் பின்னர் இன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமும் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரியமாலி அண்மையில் விடுவிக்கப்பட்ட பிணை நிபந்தனைகளில் கையெழுத்திடுவதற்காக இன்று காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

வெளிநாட்டு பயணத்தடை காரணமாக அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற முடியாது. மேலும் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜராக வேண்டும்.

மதிப்பிழந்த காசோலைகளின் மதிப்பை செலுத்த வேண்டும் என்ற கடுமையான அறிவுறுத்தலின் பேரில் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

தொழிலதிபர்கள் மற்றும் உயர் அரசியல் பிரமுகர்களுடன் நட்பாகப் பழகியதன் மூலம், தனது தொழிலில் முதலீடு செய்வதில் அதிக வருமானம் தருவதாகக் கூறி மோசடி செய்ததற்காக கடந்த அக்டோபர் மாதம் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) பிரியாமலி கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.