கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர்!

0
55
Article Top Ad

“அரசமைப்பு பேரவையூடாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதிகாரப் பகிர்வை அணுகுவர் என்பதாலேயே, கூட்டமைப்பினரது பெயர் பரிந்துரையை எதிர்த்தோம். கூட்டமைப்பினர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்லர்.”

– இவ்வாறு புதிய ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரசமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசமைப்பின் 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு இரு மாதங்கள் நிறைவுற்றுள்ளன. எனினும், அரசமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனம் இன்னும் இழுபறியிலேயே உள்ளது.

உறுப்பினர் நியமனத்தில் அரசியல் கட்சிகளுக்கிடையில் கருத்தொற்றுமை கிடையாது.

பெரும்பான்மைவாதத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், சிறுபான்மையினத்தவர்களுக்கு இடமளிக்கக்கூடாது என்பதற்காகவுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் பெயர் பரிந்துரையை, நாம் எதிர்த்ததாகக் கூறுவது அடிப்படையற்றது.

அரசமைப்பு பேரவைக்கு சுயாதீன தரப்பினர் ஒருவரின் பெயரைப் பரிந்துரைக்க நாங்கள் ஆரம்பத்தில் தீர்மானிக்கவில்லை” – என்றார்.