Thursday, 19 November 2026
நாணய மாற்று 🍁 1 CAD
  • Rs LKR 232.27 ▼ 0.23%
  • ₹ INR 65.23 ▼ 0.24%
  • $ USD 0.6982 ▼ 0.19%
  • € EUR 0.6363 ▲ 0.02%
  • £ GBP 0.5307 ▲ 0.15%
  • A$ AUD 1.0390 ▲ 0.07%
புதுப்பிப்பு: 2026-11-18 23:13
வானிலை
5°C
மேகமூட்டம்
▲ 15° ▼ 3°
  • உணர்வு2°
  • ஈரப்பதம்79%
  • காற்று9 km/h
அண்மைச் செய்திகள்
கனடாவில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து கனடா முழுவதும் இன்று அவசர எச்சரிக்கை ஒலி சோதனை சீனாவில் ட்ரம்பைச் சந்தித்த பிரதமர் மார்க் கார்னி – 20 நிமிடங்கள் நீடித்த பேச்சுவார்த்தை வரவு செலவுத் திட்டத்தை நிராகரிக்கக் கோரும் எதிர்க்கட்சி – மூன்றாவது நாளாக விவாதம் கனடா முழுவதும் இன்று அவசர எச்சரிக்கை ஒலி சோதனை  ரொனால்டோவுக்கு போர்த்துக்கல் அளிக்கும் அபூர்வ கௌரவம் – இனி 7ஆம் இலக்கம் கூட மாறுகிறது! தமிழ்த் தேசிய அரசியலின் துணிச்சலான குரல் ஓய்ந்தது! – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நள்ளிரவு காலமானார் 74 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் மைக்ரோசொப்ட் சேவைத் தடை — ரொறன்ரோ மருத்துவமனைகளிலும் மின்னஞ்சல் பாதிப்பு ஜென்சன் ஹுவாங் குறித்த செய்தியால் கவனம் பெற்ற கிம்பர்லி பவல் யார்? ஆர்க்டிக் பகுதியில் எண்ணெய், எரிவாயு அகழ்வுக்கு தடை – நீக்குவது குறித்து இன்னும் முடிவில்லை ; மார்க் கார்னி

டுவிட்டர் சின்னத்தை குருவி உருவத்தில் இருந்து x ஆகமாற்றிய எலன் மஸ்க்

பகிர்FacebookWhatsAppXTelegram

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான Metaவிடம் இருந்து Threads என்ற செயலி வந்தது முதலாக தனது இருப்பைத்தக்கவைத்துக்கொள்ள டுவிட்டர் நிறுவனம் கடும் முயற்சிகளை எடுத்துவருகின்றது.

டுவிட்டரின் புதிய சின்னம் தொடர்பான அறிவிப்பை திங்கட்கிழமையன்று டுவிட்டர் நிறுவன உரிமையாளர் எலன் மஸ்க் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி லின்டா யக்கரீனோ ஆகியோர் அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் தலைமையகத்தின் கட்டிடத்தின் பக்கத்தில் புதிய x சின்னத்தின் படத்தைப் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில், பிரபஞ்சம் பற்றி புரிந்து கொள்வதற்காக புதிதாக x.ai (எக்ஸ்.ஏ.ஐ. )என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒன்றை தொடங்க இருக்கிறேன் என எலான் மஸ்க்  கூறினார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை டுவிட்டர் தளம் மறுசீரமைக்கப்படும் என தெரிவித்ததுடன் வர்த்தக குறியீடாக உள்ள டுவிட்டர் என்ற பெயருக்கு விரைவில் நாங்கள் விடை கொடுக்கலாம் எலான் மஸ்க் டுவிட்டரில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை ருவிட்டரின் புதிய x லோகோவை அவர்  வெளியிட்டார். அந்த லோகோவில் கறுப்பு பின்னணி நிறத்தில் எக்ஸ் என்ற வெள்ளை எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் ருவிட்டரின் நீலப்பறவை மாற்றமடையவுள்ளது.

எலன் மாக்ஸ் ருவிட்டர் பதிவில் லோகோ மாற்றப்பட்டு எக்ஸ்.கொம் (X.com) என்பதைச் சேர்த்துள்ளார்.