மீண்டும் இலங்கை வந்துச் சென்ற ரஜினிக்காந்த்

0
64
Article Top Ad

கடந்த 14 ஆம் திகதி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊடாக சென்னையிலிருந்து மாலைத்தீவுக்கு ரஜினிகாந்த் பயணம் செய்திருந்தார்.

தென்னிந்திய பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் இலங்கை வந்துச் சென்றுள்ளார்.

இலங்கை ஊடாக மீண்டும் தமிழகம் சென்ற போது இன்று (26) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள “Gold Route” பிரத்தியேக ஓய்வறையில் சிறிது நேரம் ரஜினிகாந்த் தங்கியிருந்துள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

விமான நிலையத்தில் உள்ள “Gold Route” இல் விமான நிலைய ஊழியர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் “Gold Route” பயணப் பாதையை பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 14 ஆம் திகதி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊடாக சென்னையிலிருந்து மாலைத்தீவுக்கு பயணித்த ரஜினிகாந்த், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சில மணித்தியாலங்களை செலவிட்டிருந்தார்.

இதன் பின்னர் நடிகர் ரஜினிகாந்த், கட்டுநாயக்கவில் இருந்து மாலைத்தீவின் மாலே நோக்கி சென்ற விமானத்தில் புறப்பட்டுச் சென்றிருந்தார்.

இந்நிலையிலேயே, இலங்கை ஊடாக மீண்டும் தமிழகம் சென்ற போது இன்று (26) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள “Gold Route” பிரத்தியேக ஓய்வறையில் சிறிது நேரம் ரஜினிகாந்த் தங்கியிருந்துள்ளார்.

Gold Route சேவையின் ஊடாக , மிக உயர்தரமான சலுகைகள், முன்னுரிமை சேவைகள், பிரத்தியேக ஓய்வறை வசதி, பிரத்தியேக கடவுச்சீட்டு சோதனை, கடவுச் சீட்டு கட்டுப்பாடு மற்றும் பயணப் பொதிகள் பாதுகாப்பு வசதி என்பன வழங்கப்படுகின்றன.